'தோல்வி பயத்தில் திணறிப் போயுள்ளார்'; எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ள ஆர்.எஸ். பாரதி..! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி பென்னாத்தூர் பேரூராட்சி திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்துக்கொண்டு பேசினார்.

அப்போது பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தாய்மார்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளதோடு,  இந்த ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவது முதல்வருடன் நெருக்கமாக இருந்த எங்களுக்கு கூட தெரியாது என்பதுதான் உண்மை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியா முழுவதும் இரவோடு இரவாக பணமதிப்பின்மை செய்தவர் மோடி என்றும், அதேபோல் ஐந்தாயிரம் ரூபாயும் கொடுக்க விடாமல் தடுத்து விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை எண்ணிய முதல்வர் இரவோடு இரவாக நடவடிக்கை எடுத்து காலையில் 1.30 கோடி பேருக்கும் ரூ.5,000 உரிமைத்தொகையை வழங்கி உள்ளார் என்று கூறியுள்ளார்.

அத்துடன், உரிமைத்தொகை ஐந்தாயிரத்தை முதல்வர் வழங்குவது தெரியாமல், எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே தேர்தல் அறிக்கை விட்ட  தற்போது தோல்வி பயத்தில் திணறிப் போயுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், வரக்கூடிய தேர்தலில் 200 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்றும் திமுக மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RS Bharathi has criticized Edappadi Palaniswami for being paralyzed by fear of defeat


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->