''தாய் பசியால் வாடினாலும் தவறு செய்ய மாட்டோம் என்ற கொள்கை கொண்டவர்கள் நாங்கள்; பாதுகாப்புத்துறை அமைச்சர் பேச்சு சிறுபிள்ளைத் தனமாக இருந்தது'': ஆ.ராசா பேச்சு..!
Raza speech called Defense Minister Rajnath Singhs speech childish
பஹல்காம் தாக்குதல் குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் ஆ.ராசா, குறிப்பிட்டுள்ளதாவது: திமுக என்பதே தேச ஒற்றுமைக்கான கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு இந்தி தெரியாது, புரியாது; ஆனால் நான் இந்தியன். ஆனால், எங்களை தேச விரோதிகள் போல சித்தரிக்க முயற்சிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாஜக அமைச்சர்களின் பேச்சில் பெருமை இருந்தது; ஆனால் கருத்து இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்த விவகாரம் ஆனாலும் நேரு, இந்திரா, காங்கிரஸ் என பேசுவதே பாஜகவினரின் வாடிக்கையாகிவிட்டது என்றும், அண்டை நாடுகளுடன் போர் ஏற்பட்டபோது நேரு எதையும் மறைக்கவில்லை என்றும், பஹல்காம் தாக்குதலுக்காக பிரதமர் முதல் பாஜக எம்.பி. வரை ஒருவர் கூட வருத்தம் தெரிவிக்கவில்லை என்று தெறிவித்துள்ளார்.

அத்துடன், பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாலேயே வெற்றி என கூறக்கூடாது என்றும், உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், தாய் பசியால் வாடினாலும் தவறு செய்ய மாட்டோம் என்ற கொள்கை கொண்டவர்கள் நாங்கள். உளவுப் பிரிவும், ரா அமைப்பும் பல முன்னெச்சரிக்கைகளை கொடுத்தும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 1999 டிசம்பர் 24-இ ல் இந்திய விமானம் கடத்தப்பட்டபோது, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் முடிவுக்கு ஆதரவு தந்தோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தீவிரவாதி மவுலானா ஆசாத்தை விடுவிக்க முடிவு செய்த பிரதமர் வாஜ்பாயின் முடிவை ஆதரித்தோம் என்றும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு சிறுபிள்ளைத் தனமாக இருந்தது என்று கூறியுள்ளார்.
அத்துடன், தேர்வில் பென்சில், பேனா பயன்படுத்துகிறோமா என்பது பிரச்சனை அல்ல எட்ன்றும் அதில் முறைகேடு நடக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும், 03 நாடுகள் தவிர ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் நடவடிக்கையை ஆதரித்ததாக அமித்-ஷா கூறினார். ஆனால் ஒரு நாடு கூட பாகிஸ்தானை கண்டித்தோ, இந்தியாவை ஆதரித்தோ தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பிரிக்ஸ், ஜி20, ஜி7 என எந்த அமைப்பும் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை என்றும், பஹல்காம் தாக்குதல் முழுக்க முழுக்க உளவுத்துறையின் தோல்வியே என்று குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், ஐ.எம்.எஃப் நிதியம் பாகிஸ்தானுக்கு நிதி ஒதுக்கியது இந்தியாவுக்கு பின்னடைவு என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Raza speech called Defense Minister Rajnath Singhs speech childish