திமுக அமைச்சர்கள் மாறி மாறி சிறைக்கு செல்கின்றனர் - பிரச்சாரத்தில் ராதிகா காட்டம்.! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது;-

"தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போதைப்பொருள் புழக்கம், ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன. அமைச்சர்கள் மாறி மாறி சிறைக்கு செல்கின்றனர். தேசத்தை காப்பாற்றுவதற்காக அவர்கள் சிறைக்கு போகவில்லை, ஊழல் செய்ததால் போகிறார்கள்.

விருதுநகர் தொகுதியில் பல பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் என்னிடம் சொல்கிறார்கள். மக்களுக்கு என்னால் நல்லது செய்ய முடியும் என்று சொல்லக்கூடிய ஒரு இடத்தில் நான் இருக்கிறேன். மக்களுக்கு நல்லது செய்யும் ஒரு தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார்" என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rathika sarathkumar speech in election campaighn at aruppukkottai


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->