நடிகர் ராமராஜனுக்கு என்ன ஆனது?! வெளியான செய்தி!
ramarajan now
நடிகர் ராமராஜனுக்கு கடந்த 17 ஆம் தேதி கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
சிகிச்சைக்கு பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடிகர் ராமராஜன் தாம் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ராமராஜன் வெளியிட்ட செய்தி குறிப்பில், "கொரோனா தாக்கம் இருக்குமோ என்ற ஐயப்பாடு இருந்ததால் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் தாம் சிகிச்சை பெற்றேன்.

நான் விரைவில் நலம் பெறவேண்டிய முதலமைச்சர், துணை முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்." என்று நடிகர் ராமராஜன் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.