டிடிவி தினகரனுக்கு ராஜ்யசபா சீட்? – ‘முக்குலத்தோர் வாக்கு + டெல்லிக்கு பார்சல்’ எடப்பாடி போடும் கணக்கு!பேக் எண்டில் இப்படி ஒரு மாஸ்டர் ப்ளானா? - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்திருக்கும் நிலையில், அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பின்னணியில், ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை வழங்க எடப்பாடி கே. பழனிச்சாமி முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருகாலத்தில் ‘துரோகி’, ‘பச்சை துரோகி’, ‘முதுகில் குத்தியவர்’ என எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன், இன்று அதே எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், “டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அதிமுகவில் இடமே இல்லை” எனக் கூறி வந்த எடப்பாடி, தற்போது தினகரனை கூட்டணியில் சேர்த்துள்ளதும், அவருக்கு 5 முதல் 8 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்ற பேச்சும் பேசப்படுகிறது.

இந்த சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் நேரடியாக போட்டியிடாமல், தனது ஆதரவாளர்களை முழுமையாக களத்தில் இறக்குவேன் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதையடுத்து, அவரது முக்கிய இலக்கு மாநில அரசியல் அல்ல; ராஜ்யசபா சீட்டே என்றே அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், தற்போதைய சட்டமன்ற எண்ணிக்கையின் அடிப்படையில் திமுகவுக்கு 4 ராஜ்யசபா சீட்டுகளும், அதிமுகவுக்கு 2 சீட்டுகளும் கிடைக்கும் சூழல் உள்ளது. இந்த இரண்டு சீட்டுகளில் ஒன்றை அதிமுகவினருக்கும், மற்றொன்றை டிடிவி தினகரனுக்கும் வழங்க எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இரட்டை லாபம் கிடைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். முதலில், மன்னார்குடி, டெல்டா பகுதிகள் மட்டுமல்லாமல் தேனி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் டிடிவி தினகரனுக்கு உள்ள முக்குலத்தோர் சமூக ஆதரவு, அதிமுகவுக்கு தேர்தலில் கணிசமான பலத்தை சேர்க்கும். இரண்டாவதாக, மாநில அரசியலில் தொடர்ந்து செயல்பட்டால் எப்போது வேண்டுமானாலும் தனக்கு எதிராக திரும்பக்கூடிய டிடிவி தினகரனை, டெல்லி அரசியலுக்கு ‘பார்சல்’ செய்து விடலாம் என்பதே எடப்பாடியின் வியூகமாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அதிமுகவை ‘கவுண்டர் கட்சியாக’ எடப்பாடி மாற்றிவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்ததன் மூலம் அந்த குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்க முடியும் என்ற கணக்கும் இதில் அடங்கியுள்ளது. மேலும், திமுக உள்ளிட்ட பல கட்சிகளில் பின்பற்றப்படும் “டெல்லிக்கு ஒருவர் – தமிழகத்திற்கு ஒருவர்” என்ற ஃபார்முலாவை இப்போது எடப்பாடி கையில் எடுத்துள்ளதாகவும் பேசப்படுகிறது.

ஜெயலலிதா காலத்தில் டெல்லி அரசியலை கவனித்துக் கொண்டிருந்தவர் டிடிவி தினகரனே என்பதால், மீண்டும் அவரை மாநிலங்களவை வழியாக டெல்லிக்கு அனுப்பி வைத்து, தமிழக அரசியலை தானே முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எடப்பாடி பழனிச்சாமியின் நோக்கம் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. அதனால்தான், பல கட்சிகள் கேட்டும் வழங்காத ராஜ்யசபா சீட்டை, டிடிவி தினகரனுக்கு வழங்க முன்வந்ததாகவும், அதற்குப் பதிலாகவே அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்ததாகவும் அதிமுகவினர் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajya Sabha seat for TTV Dhinakaran Mukulathor votes parcel to Delhi is a mind boggling calculation Is this a master plan at the back end


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->