அபார வெற்றி பெற்ற பின் வயநாடு வருகை தரும் ராகுல் காந்தி.. எம். பி. பதவியை ராஜினாமா செய்கிறாரா?
Rahul Gandhi Will come To Wayanad After His Enormous Victory
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வென்றுள்ள ராகுல் காந்தி, தன்னை இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்த வயநாடு மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
முன்னதாக வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜாவை 3.64 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
இந்நிலையில் ராகுல் காந்தி உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அரசியல் சாசனத்தின்படி ஒருவர் ஒரு பதவி மட்டுமே வகிக்க வேண்டும் என்பதால் ஒரு எம். பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்.
உத்திரபிரதேசத்தில் காங்கிரசுக்கு சாதகமான சூழல் நிலவுவதால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியை ராஜினாமா செய்து விட்டு அங்கு பிரியங்கா காந்தியை நிற்க வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர்.
இந்நிலையில் ஜூன் 12ம் தேதி வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கேரளா வரும் ராகுல் காந்தி, இன்று வாக்காளர்களிடம் தனது ராஜினாமா குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் எழுந்துள்ளது.
English Summary
Rahul Gandhi Will come To Wayanad After His Enormous Victory