தேர்தல் சீர்திருத்தம் விவாதம்; மத்திய அரசுக்கு 3 கேள்விகள் மற்றும் 04 கோரிக்கைககளை முன்வைத்துள்ள ராகுல் காந்தி..! - Seithipunal
Seithipunal


தேர்தல் சீர்திருத்தம் குறித்த விவாதம் லோக்சபாபாவில் இன்று தொடங்கியது. விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மத்திய அரசிடம் 03 கேள்விகளையும் 04  கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.

ராகுல் எழுப்பிய 03 கேள்விகள்:

01. தேர்தல் கமிஷனர்கள் நியமனம் செய்வதற்கான தேர்வுக்குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியது ஏன்..? அவரை நீக்குவதற்கு என்ன நோக்கம் இருக்கிறது. யார் தேர்தல் கமிஷனராக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தீவிரமாக இருப்பது ஏன்..? இந்தத் தேர்வுக்குழுவில் நான் உறுப்பினராக இருந்தும், ஆளும் தரப்பில் அதிகமானோர் உள்ளதால் எனது குரல் கேட்கப்படவில்லை.

02. கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியில் இருக்கும் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்காக எந்த தேர்தல் கமிஷனருக்கும் தண்டிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு சட்டத்தை மாற்றியது. தேர்தல் கமிஷனருக்கு இந்தப் பரிசை பிரதமரும், உள்துறை அமைச்சரும் வழங்கியது ஏன்..? தேர்தல் கமிஷனருக்கு முன்பு இருந்த எந்த பிரதமரும் வழங்காத இந்த மகத்தான பரிசை மோடி வழங்கியது ஏன்..?

03. ஓட்டுப்பதிவு மையங்களில் உள்ள சிசிடிவிக்கள் மற்றும் தகவல்கள் குறித்த சட்டங்கள் மாற்றப்பட்டது ஏன்..? தேர்தல் முடிந்த 45 நாட்களில் சிசிடிவி காட்சிகளை அழிப்பதற்கு தேர்தல் கமிஷனுக்கு அனுமதி வழங்கி சட்டம் இயற்றியது ஏன்..? அதற்கான காரணம் என்ன இதற்கு தகவல்கள் குறித்த பிரச்சினைகள் உள்ளதாக ஆளுங்கட்சி கூறியது. இது தகவல்கள் குறித்த கேள்வி அல்ல. அது தேர்தலை திருடியது தொடர்பான கேள்வி.

ராகுலின் 04 கோரிக்கைகள்.

01. தேர்தல் நடத்துவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, மிஷினால்படிக்கககூடிய வாக்காளர் பட்டியல் வழங்கப்பட வேண்டும்.

02. சிசிடிவி பதிவுகளை அழிக்கும் சட்டத்தை திரும்பபெற வேண்டும். இது கடினம் அல்ல. எளிதானது.

03. மின்னணு ஓட்டு இயந்திரத்தின் கட்டமைப்பு குறித்து விளக்க வேண்டும். மின்னணு ஓட்டு இயந்திரத்தை அணுக வேண்டும். அதற்குள் என்ன இருக்கிறது என்பதை எங்கள் நிபுணர்கள் ஆய்வு செய்யட்டும். இன்று வரை மின்னணு ஓட்டு இயந்திரம் அணுக வாய்ப்பு இல்லை

04. விரும்பும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என தேர்தல் கமிஷனருக்கு வழங்கப்பட்ட அனுமதியை மாற்ற வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi has put forward 3 questions and 4 demands to the Central Government in the Lok Sabha


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->