மக்கள் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியது.!! - ராகுல் காந்தி குற்றச்சாட்டு.!! - Seithipunal
Seithipunal


மல்யுத்த போட்டிகளில் போட்டியிட்டு பதக்கங்களை வென்ற ஏழு பெண் மல்யுத்த வீராங்கனைகளை இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு நியாயம் வேண்டும் எனவும், பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி இன்று ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிய மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பேரணியாக சென்றனர். 

அப்போது மல்யுத்த வீரர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர். இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில் "முடிசூடும் விழா முடிந்தது; மக்களின் குரல்களின் நசுக்கும் பணி தொடங்கியது!” என குறிப்பிட்டு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi alleges people voices suppressing process has begun


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->