மத்திய அரசே சொல்லியாட்சி., வெற்றிக்கொடி நாட்டிய எடப்பாடி பழனிச்சாமி.!
r p udhyakumar say about admk eps and central govt
எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக என்று, மத்திய அரசு அங்கீகரித்து உள்ளதாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சரமான ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்பி உதயகுமார் தெரிவிக்கையில், "குடியரசு தலைவர் பதவி ஏற்பு நிகழ்ச்சியிலும், குடியரசுத் தலைவர் பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொள்வதற்கு, மத்திய அரசு அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும்தான் அழைப்பு விடுத்துள்ளது.

அதிமுகவின் ஒற்றை தலைமை எடப்பாடி கே பழனிசாமிதான் என்று, மத்திய அரசிடம் இருந்து அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களின் இதயமாக விளங்கக்கூடிய அதிமுகவின் தலைமை கழகத்தின் கதவை, காலணி அணிந்த அவர்களின் கால்களால் எட்டி உதைத்தனர். இதற்கு திமுக அரசும் உடந்தையாக இருந்தது.

வருவாய்த்துறை மூலம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். தற்போது அதிமுகவின் தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமியின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகத்திற்கு தலைக்குனிவான ஒரு சம்பவம். இதற்கு தமிழகம் முதலமைச்சர் பதில் சொல்லியே ஆக வேண்டும். தமிழகத்தில் சட்ட வழங்க என்பது கேள்விக்குறிதான்" என்று ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.
English Summary
r p udhyakumar say about admk eps and central govt