கோவையில் அமைதி பேரணி - அறிவிப்பை வெளியிட்ட புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி! - Seithipunal
Seithipunal


கோவையில் வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ள 'அமைதியான கோவைக்கு ஒரு பேரணி' (RALLY OF PEACE FOR COIMBATORE) என்ற நோக்கத்தில் நடக்க உள்ள அமைதி போணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்த அரிந்த அந்த அறிவிப்பில், "கோவை மாநகரம்-மாவட்டம் தொன்றுதொட்டு மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மக்கள் வாழ்வதற்கு மிகவும் உகந்த தட்பவெப்ப சூழலில் அமைந்துள்ள மிக முக்கியமான தொழில் நகரமாகும். மும்பைக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவின் 'மான்செஸ்டர்' என்று அழைக்கப்படக்கூடிய அளவிற்கு நூற்பாலைகளும், பிற தொழில் நிறுவனங்களும்; தற்பொழுது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பெருகி வரும் நகரமாக விளங்குகிறது.

1998 இல் நடந்த தொடர் வெடிகுண்டு நிகழ்வுகள் பெரும் உயிரிழப்புக்களையும், பொருளாதார சேதங்களையும் உருவாக்கியது. அதனால், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதித்தது. கடந்த 23ஆம் தேதி அதிகாலை கோவை, கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் வெடி விபத்தும், அதைத் தொடர்ந்து அதில் சம்பந்தப்பட்டவர்களுடைய இல்லங்களில் நடைபெற்ற சோதனைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதும் மிகக் கவலை அளிக்கக் கூடியது ஆகும். 

கோவைக்கு நேர்ந்திருக்கக் கூடிய மிகப்பெரும் ஆபத்து அதிர்ஷ்டவசமாக அன்று தடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் திட்டப்படி ஏதாவது நிகழ்ந்திருக்குமேயானால் கோவையை மட்டும் அல்ல, தமிழகம் - இந்தியாவின் ஒட்டுமொத்த அமைதியையும் சீர்குலைத்து இருக்கக்கூடும். இது போன்ற தீவிரவாதிகளின் கேந்திரமாக கோவையைத் தொடர்ந்து அனுமதிப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது ஆகாது.

எனவே. கோவையில் நிரந்தரமாக பயங்கரவாத செயல்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும்.; அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் நல்ல எண்ணங்களும், ஒற்றுமை உணர்வும், ஒருமைப்பாடும் வளர்க்கப்பட வேண்டும். சட்டம் ஒரு பக்கம் தனது கடமையைச் செய்தாலும், மக்கள் மத்தியில் நிலவும் நல்ல உணர்வுகளே நிரந்தரமான அமைதியை உருவாக்கும். 

எனவே, கோவை வாழ் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு மிகப்பெரிய சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உருவாக்கக்கூடிய வகையில் அனைத்து தொழில் - வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மத அமைப்புகள் உட்பட அனைவரும் பங்கேற்கக் கூடிய வகையில் வரும் வருகின்ற 17.11.2022 ஆம் தேதி வியாழக்கிழமை காலை கோவிலிலிருந்து மாவட்ட 11 மணி அளவில் கோட்டைமேடு ஆட்சியர் அலுவலகம் வரை கோட்டை ஈஸ்வரன் 'RALLY OF PEACE FOR COIMBATORE' எனும் தலைப்பில் கோவையில் 'அமைதிப்பேரணி' நடைபெற உள்ளது.

எனவே, அதில் தமிழக - கோவை மக்கள் அனைவரும் பெரும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அந்த அறிவிப்பில் டாக்டர் க, கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puthiya Thamilagam party RALLY OF PEACE FOR COIMBATORE


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->