பன்னீர்செல்வத்திற்கு பெரும் பின்னடைவு... பழனிச்சாமிக்கே ஆதரவு என புரட்சி பாரதம் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளதால் திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஆனால் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையின் காரணமாக இரு அணிகளாக பிரிந்துள்ளன. 

கடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்டு இருந்தது. இந்த நிலையில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால் அதிமுகவுக்கு விட்டுக் கொடுப்பதாக ஜி.கே வாசன் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பழனிச்சாமி அணியினர் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் அதிமுக சார்பில் போட்டியிட போவதாக அறிவித்தார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணி அளவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனை சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மற்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தமிழ் மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சி தலைவர்களை சந்திக்க இருப்பதாக அறிக்கையின் மூலம் பன்னீர்செல்வம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பழனிச்சாமி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பாக போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு தனது முழு ஆதரவு தெரிவிப்பதோடு தேர்தல் பணியிலும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். பன்னீர்செல்வம் அனைத்து கூட்டணி கட்சியினரையும் சந்திக்க இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் ஜெகன் மூர்த்தி தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். இது பன்னீர்செல்வத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puratchi Bharatham jaganmoorthy support EPS team in Erode East by elections


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->