பிரதமரின் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை...! - திமுக, காங்கிரஸை கடுமையாக சாடிய நிர்மலா சீதாராமன்...! - Seithipunal
Seithipunal


கோவை முதலிபாளையத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக மற்றும் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார்.“மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் பெண்களின் முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டவை. ஆனால் பிரதமர் மோடிக்கு நல்ல பெயர் வரக்கூடாது என்பதற்காக சிலர் திட்டங்களுக்கே தடைகள் ஏற்படுத்துகின்றனர்.

பேரவையில் பலம் இருப்பதால் பிரதமருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்,” என அவர் குற்றம்சாட்டினார்.அதனுடன், “ஜல்லிக்கட்டை நிறுத்தியது காங்கிரஸ்; அதற்கு திமுக ஆதரவளித்தது. ஆனால் தமிழக கலாசாரத்தை காப்பாற்றி ஜல்லிக்கட்டை மீண்டும் உயிர்ப்பித்தது பிரதமர் மோடி தான்!” என்றும் கூறினார்.

“கேரளா மாநிலம் பிஎம் ஸ்ரீ கல்வித் திட்டத்தை கேட்டு வருகிறதே, ஆனால் தமிழகத்தில் கல்வி என்றாலே போராட்டம் நடத்தப்படுகிறது. நீட் தேர்வு வழியாக கிராமப்புற ஏழை மாணவர்களும் மருத்துவக் கல்லூரிகளில் சேருகிறார்கள். அதை ஏற்படுத்தியவர் மோடி. ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டை ரத்து செய்வோம் என்றார்கள், ஆனால் அது ஏழைகளுக்கே ஆதாரம் ஆனது,” என அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறியதாவது,“மத்திய அரசின் நலத்திட்டங்களை தமிழக மக்களிடம் சேரவிடாமல் தடுக்கிறதே திராவிடக் கட்சிகளின் நோக்கம். மத்திய அரசை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதற்காக அரசின் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். மாநிலம் வசூலிக்கும் வரியை முழுமையாகத் திருப்பி தர முடியாது; அது பொருளாதார நியாயம் அல்ல. ஆனால் இங்கு வன்மத்துடன் நடக்கும் திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

”அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், நிர்மலா சீதாராமன் மேலும்,“தீபாவளிக்கு பிறகு ஜிஎஸ்டி வரி குறைப்புகள் மக்கள் வாழ்க்கையில் நன்மை கொண்டுவந்துள்ளன. ஒவ்வொரு முறையும் வாக்காளர் பட்டியலில் மாற்றங்கள் செய்வது தேர்தல் ஆணையத்தின் கடமைதான்.

இறந்தவர்கள் அல்லது வெளியூரில் இருப்பவர்கள் பட்டியலில் சேர வேண்டுமா என்பதை அவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.2000-ம் ஆண்டுக்குப் பிறகு 4 முறை SIR (Special IntensiveRevision) நடைமுறைப்படுத்தப்பட்டது; மொத்தம் 13 முறை நடந்திருக்கிறது. அதில் திமுக மத்திய அமைச்சரவையிலும் இருந்தது.

அப்போது பிரச்சனை இல்லை; இப்போது தான் தவறு என்கிறார்கள்.இது மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே மாற்ற முயற்சி, மக்களைத் தவறாக வழிநடத்தும் முயற்சி! பாஜக வென்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறை; அவர்கள் வென்றால் ஏதுமில்லை என்கிற இரட்டை நிலைப்பாடு தெளிவாக தெரிகிறது” என அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Ministers welfare schemes are facing hurdles Nirmala Sitharaman strongly criticizes DMK Congress


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->