இந்தியா -பாகிஸ்தான் தாக்குதலால்... பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு - Seithipunal
Seithipunal


காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இன்று அதிகாலை 3 தீவிரவாத அமைப்புகளை குறிவைத்து 9 இடங்களில்  ''ஆப்ரேஷன் சிந்தூர்'' நடத்தப்பட்டது.இதில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இதனால், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் அடுத்த சில நாட்களுக்கு, ஒரு சில முக்கிய அலுவல்களில் மட்டுமே கலந்து கொள்வார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல் சூழ்நிலையால், பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு பயணங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,குரோஷியா, நார்வே, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு வருகிற 13-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரையிலான பிரதமர் நரேந்திர மோடியின் பயணங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களிடையே போர் பதற்றம் ஏற்படுவதால்,அதிகாரிகளும் பதற்றம் பட அவசியம் இல்லை என மக்களுக்கு தெரிவித்துள்ளன.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Narendra Modi visit postponed due to India Pakistan attack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->