பிரசாந்த கிஷோர் எடுத்த அதிரடி முடிவு.. கலக்கத்தில் அரசியல் கட்சிகள்.!
Prasanth Kishore said that Here after he Did Not Help To any party
இனி எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பணியாற்ற போவதில்லையென அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
வருகின்ற 2024-இல் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பாஜகவை வீழ்த்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் எதிர்க்கட்சி சார்பில் பல்வேறு முயற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன் அரசியல் வியூக நிபுணராகவுள்ள பிரசாந்த் கிஷோரை சந்தித்து நிதீஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டார். இதன் காரணமாக மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் வெற்றி வியூகம் அமைத்து கொடுக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது.
இதை எடுத்து சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார். அதில், "இனி எந்த ஒரு அரசியல் கட்சிக்காகவும் நான் பணியாற்ற போவதில்லை. மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன். பீகாரில் நடைமுறையில் இருக்கும் எனது அமைப்பை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளேன். இதனால், பீகாரில் மூன்றாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு நடை பயணம் மேற்கொள்ளவுள்ளேன்." என்று கூறியுள்ளார்.
English Summary
Prasanth Kishore said that Here after he Did Not Help To any party