சொத்து குவித்த வழக்கில் மறுவிசாரணை கூடாது! உச்ச நீதிமன்றத்தை நாடிய பொன்முடி! - Seithipunal
Seithipunal


சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்ததற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கிற இடைக்கால தடை விதிக்க கோரி அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு!

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.36 கோடிக்கு சொத்து சேர்த்ததாக பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது கடந்த 2002 ஆம் ஆண்டு  விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சிக்கு எதிரான இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும் போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் இருவரையும் விடுதலை செய்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மேல்முறையீடு செய்யாததை அடுத்து குற்ற விசாரணை நடைமுறை சட்டம் 397 வது பிரிவின்படி  விசாரணை நீதிபதிகளின் முடிவுகள் சரியானதா என ஆய்வு செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து இந்த வழக்குகளை மறுவிசாரணைக்கு எடுத்துக் கொண்டார். 

இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு மறு விசாரணைக்கு ஏன் எடுக்கப்பட்டது என்பது குறித்து விரிவான விளக்கத்தை அளித்திருந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி அவருடைய மனைவி விசாலாட்சி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்திருந்தார். 

இந்த நிலையில் தன் மீதான சொத்து குறிப்பு வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுதலை செய்ததை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்துக் கொண்டதைற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி சார்பில் வழக்கறிஞர் தேவயானி குப்தா சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்துக் கொண்டதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் எண்ணிடப்பட்டு கூடிய விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை மறு விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponmudi appeal seeking a stay on asset forfeiture case retrial


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->