குடியரசு தினத்தில் அரசியல் முழக்கம்: ‘கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு’! - நயினார் நாகேந்திரன்
Political slogan on Republic Day The tyrannical rule must end Nainar Nagendran
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவில், நாட்டின் அரசியலமைப்புச் சிறப்பையும் அரசியல் மாற்றத்திற்கான அழைப்பையும் வலியுறுத்தியுள்ளார்.

அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது,"1950-ம் ஆண்டு ஜனவரி 26 அன்று, இந்தியா தனக்கென தனி இறையாண்மை, கொள்கை, கோட்பாடு, அரசியலமைப்பு ஆகியவற்றை உருவாக்கி, நாடாளுமன்றத்தின் வாயிலாக அவற்றை நடைமுறைக்கு கொண்டு வந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நாள் இன்று.
இந்த 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் நிலவி வரும் கொடுங்கோல் மன்னர் ஆட்சிக்கு முடிவுகட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) தலைமையிலான குடியாட்சி மலரச் செய்வதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி, வெற்றியை உறுதி செய்வோம்.
இந்த உறுதி மொழியுடன், அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Political slogan on Republic Day The tyrannical rule must end Nainar Nagendran