திமுக, அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்.!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் காண மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், திமுக-அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, திமுக-அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது போலீஸார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 4ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அப்போது கோயமுத்தூர் மாவட்டம், வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலின் போது அதிமுக கவுன்சிலர், திமுக கவுன்சிலர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 

இந்த நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அதிமுக, திமுகவை சேர்ந்த 15 கவுன்சிலர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வெள்ளலூர் பேரூராட்சியை பொருத்தவரை அதிமுக 8 கவுன்சிலர்களையும், திமுக 7 கவுன்சிலர்கள் பெற்றுள்ளனர். பேரூராட்சி தலைவர் பதவி என்பது அதிமுகவுக்கு தான் உறுதி என்ற நிலையில், திமுகவினர் வாக்குவாதம் செய்து, தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக அதிமுக தரப்பில் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police case file against admk and dmk counselor


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->