வாளோடு வீரநடை போட்ட முகமதுவை., லுங்கியுடன் கைகட்டி கைது செய்த சிவகங்கை காவல்துறை.! சட்டத்தை மீறியதால் சட்டப்படி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


போருக்கு மன்னர்கள் பயன்படுத்தும் வாளைக் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டிய, முகமது என்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழர் கலாச்சாரத்தை அயல் நாட்டவர்கள் பார்த்து வியந்து கொண்டிருக்கும் இதே வேளையில், அயல் நாட்டுக் கலாச்சாரத்துக்கு தமிழ் சமூகம் அடிமையாகி வருகின்றது. வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக இருந்ததால் என்னவோ தெரியவில்லை., அவர்களின் கலாச்சாரத்தின் மீது தமிழர்களுக்கு அதிக ஈர்ப்பு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில், வெள்ளைக்காரர்கள் பிறந்த நாளன்று கேக் வெட்டி கொண்டாடும் பழக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளது. இதில், எந்த மதம், சாதி என்ற எந்த வரைமுறையும் இல்லை. அனைவருமே கேக் வெட்டி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். 

இதில், ஒரு சில சமூக விரோதிகள், தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள, மன்னர்கள் பயன்படுத்தும் வாளைக் கொண்டு கேக் வெட்டி கொண்டாடுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. இப்படி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

அதே சமயத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரைப்படங்களில் தான் பெரிய ஒரு சமூக சீர்திருத்தவாதி போல் காட்டிக் கொள்ளும் நடிகர் விஜய் சேதுபதி, வாள் கொண்டு கேக் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்வார்களா போலீசார் என்று பார்த்தால், நடிகர் விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்ட காரணத்தினால், அவரை போலீசார் கைது செய்யவில்லை. 

ஒருவேளை திரையில் நல்லவனாக காட்டி கொண்டால் இதுபோன்ற சலுகைகள் கிடைக்கும் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பொறுப்பாக கருத்து தெரிவித்தனர். 

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வாள்க் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய 4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். முகமது அபுபக்கர் சித்திக் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்போது அந்த கேக்கை வெட்ட நீண்ட வாள் ஒன்றை பயன்படுத்தி வெட்டிவிட்டார். இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இதனையடுத்து சிவகங்கை போலீசார் 'பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக கூறி, முஹம்மது அபூபக்கர் சித்திக் உள்ளிட்ட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கேக்கு வெட்டும்போது டிப்டாப்பாக வந்த வெட்டிய முகம்மது அபூபக்கர் சித்திக்., போலீசார் கைது செய்யும்போது லுங்கியுடன் கைகட்டி நின்று இந்த சம்பவம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றும், இது நடிகர்களுக்கு பொருந்தாது என்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police arrest devakottai muhamad


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal