#Breaking || வன்னியர் இடஒதுக்கீடு, மதுக்கடை மூடல், நீட் தேர்வு விவகாரம் - சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ ஜிகே மணியின் அசத்தல் பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சற்றுமுன், பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி, பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், "மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இது தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சட்ட திருத்த மசோதா நிறைவேற்ற உள்ளது" என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி, "நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு பாமக துணை நிற்கும்.

10.5% இடஒதுக்கீட்டில் சிக்கல்களை களைய நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில், மதுக்கடைகளால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் அதனையும் மூட வேண்டும்" என்று சட்ட பேரவையில் ஜி.கே.மணி வலியுறுத்தி பேசினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK MLA GK Mani TNAssembly speech jan 6


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->