பெண்களுக்கு எதிரான வன்மக் கிடங்காக இருக்கிறார் ஸ்டாலின்... பெண்கள் சக்திக்கு எதிரி... தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் - அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் மகளிர்க்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. 

தமிழ்நாடு மற்றும் புதுவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாற்பது உறுப்பினர்களும், மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் இந்த மசோதாவைத் திட்டமிட்டுத் தோற்கடித்திருக்கின்றனர். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு எதிரான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் இந்த நடவடிக்கை மன்னிக்க முடியாத குற்றமாகும். 

ஆணாதிக்கத்தின் பிரதிநிதியாகத் தம்மை காட்டிக்கொள்ளும் மு.க.ஸ்டாலின், தொடக்கத்திலிருந்தே பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்த மசோதாவை எதிர்த்து வந்தார். இதற்காகப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி, இந்த மசோதாவைத் தோற்கடிக்கச் செய்திருக்கின்றார்.

தமிழ்நாடு எப்போதுமே பெண்களுக்கு மரியாதை அளிப்பது மட்டுமின்றி, அவர்களை ஆட்சியதிகாரத்தில் அமர்த்திப் பார்த்த வரலாறு கொண்டது. அத்தகைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்துகொண்டு, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் ஆக்கப்பூர்வமான முயற்சியை மு.க.ஸ்டாலின் எதிர்த்திருக்கிறார் என்றால், அவர் எந்த அளவுக்குப் பெண்களுக்கு எதிரான வன்மக் கிடங்காக இருந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். 

2021-ஆம் ஆண்டு தேர்தலில் பெண்கள் வாக்களித்ததால்தான் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார். தன்னை அதிகாரத்தில் அமர்த்திய பெண்களுக்கு மு.க.ஸ்டாலின் இப்போது பெருந்துரோகம் செய்திருக்கிறார்.

பெண்களின் நலனுக்கும் உரிமைக்கும் பாடுபடுவதாகக் கூறி மு.க.ஸ்டாலின் நடத்தி வந்த நாடகம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மு.க.ஸ்டாலினின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. மு.க.ஸ்டாலினின் இந்தத் துரோகச் செயலைத் தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாகப் பெண்கள் மன்னிக்க மாட்டார்கள். அவர்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin woman right bill


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->