நாடு முழுவதும் முழு ஊரடங்கா? இன்று மாலை பிரதமர் ஆலோசனை.! வெளியாகப்போகும் அறிவிப்புகள்.! - Seithipunal
Seithipunal


கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நடத்த உள்ள ஆலோசனை கூட்டத்தில், நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவது அல்லது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

அதேசமயத்தில், பிரதமரின் இந்த ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமரின் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து ஆலோசனை செய்யப்படலாம் என்றும், 5 மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கியமாக நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவே இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக தெரிகிறது. ஏன் என்றால் நாடு முழுவதும் ஒருநாள் பாதிப்பு ஒரு லட்சத்தி 50 ஆயிரத்தை தாண்டி விட்ட நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அல்லது பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்க அறிவுறுத்துவது சம்பந்தமாக இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(இந்த செய்தி அதிகாரப்பூர்மானது இல்லை. வெளியான தகவலின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளது)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi meeting Sunday evening


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->