மமக மாநில அமைப்பு செயலாளராக இருந்த வழக்கறிஞர் புழல் ஷேக் முகம்மது அலி ஐயூஎம்எல் கட்சியில் இணைவு..!
MAMAK State Organizing Secretary Puzhal Sheik Mohammed Ali joins the IUML
மமக மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் புழல் ஷேக் முகம்மது அலி அக்கட்சியில் இருந்து விலகி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்துள்ளார். தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகதீன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துக்கொண்டமை குறித்து புழல் ஷேக் முகமது அலி கூறியதாவது;
''தமிழ்நாட்டில் சொந்த சின்னம் வைத்துள்ள ஒரே இஸ்லாமிய கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான். தனிச் சின்னம், தன்மானம் என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு அரசியல் பயணத்தை வெற்றி பயணமாக முன்னெடுத்து வரும் கே.எம்.காதர் மொகிதீனின் தலைமையை மேலும் வலிமைபடுத்தவே எளிய தொண்டனாக ஐயூஎம்எல் இணைகிறேன்.
தவெக ஆட்சி அமைத்தது, ஜோசப் விஜய் முதல்வர் ஆனதுக்கு பேராசிரியர் காதர் மொய்தீன் தலைமயிலான ஐயூஎம்எல் தான் காரணம். தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதம் போது ஐயூஎம்எல் பெயர் இல்லாமல் யாரும் வரலாறு எழுத முடியாது. அதைபோல் இனி தமிழ்நாட்டில் ஐயூஎம்எல் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது'' என்று கூறியுள்ளார்.
English Summary
MAMAK State Organizing Secretary Puzhal Sheik Mohammed Ali joins the IUML