மகளிருக்கான ரூ. 2,500 உரிமை தொகை எப்போது வழங்கப்படும்..? நிதி அமைச்சர் வில்சன் கூறியது என்ன..? - Seithipunal
Seithipunal


தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ. 2,500 மகளிர் உரிமைத் தொகை திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில்  தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் 'மகளிர் உரிமைத் தொகை' திட்டம் நடைமுறைக்கு வந்தது. அன்று முதல் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி தகுதியுள்ள குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழகத்தை தொடர்ந்து இந்த திட்டம் மற்ற மாநிலங்களிலும் தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என விஜய் வாக்குறுதியளித்தார்.

தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு குடும்ப தலைவிகளிடையே எழுந்துள்ளது.

குறிப்பாக ”பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்” என கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், ''முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அந்த மாதம் 15-ஆம் தேதி சரியாக வரவு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் மாதமும் சரியாக 15-ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவு வைக்கப்பட்டது.

சமீபத்தில் தவெக அரசின் நிதி அமைச்சர் மரிய வில்சன், தமிழ்நாடு அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டார். இந்த சூழலில், தவெக அளித்த அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ. 2,500 உரிமைத் தொகை வழங்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், இன்று சென்னையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு அமைச்சர் மரிய வில்சன், ''மகளிருக்கு ரூ. 2,500 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரப்போகும் நாட்களில் முதலமைச்சர் அறிவிப்பார்'' என்று பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What did Finance Minister Wilson say regarding when the Rs 2500 entitlement amount for women would be disbursed


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->