இலங்கை - ஆப்கானிஸ்தான் - இந்தியா முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி; ஆணவத்திற்கு தக்க பதிலடி கொடுத்த சூர்யவன்ஷி; 66 ரன்களில் இலங்கை A அணியை வீழ்த்திய இந்திய A அணி..!
India A defeats Sri Lanka A by 66 runs
இலங்கை - ஆப்கானிஸ்தான் - இந்தியா இடையேயான முத்தரப்பு தொடரில் இறுதி போட்டி இன்று இலங்கையில் இடம்பெற்றது. இன்றைய போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு இந்திய இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி பேபி பாஸ் யாருன்னா அது நான் தான் என்றும், அவர்களின் அனைத்து நையாண்டிக்கும் தக்க பதிலடி கொடுத்துள்ள சம்பவம் அரங்கேறியது.
ஏனெனில், இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முந்தைய ஆட்டத்தில், சில இலங்கை வீரர்கள் வைபவை சீண்டியிருந்தனர். வைபவ் அவுட் ஆனதும் சில இலங்கை வீரர்கள் ஆணவமாக "இது ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல, சகோதரா, வீட்டுக்குப் போய்விடு" என்று ஏளனம் செய்தனர். அதற்கு தகுந்தாற் போல வைபவ் இன்று வைபவ் சூரியவன்ஷி அவர்களின் ஆணவத்தை சிதைத்து தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

தனது பழைய பகையைத் தீர்க்கும் விதமாக இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை முற்றிலுமாகச் சிதைத்து அவர்களை நரகத்திற்கு சென்ற வலியை கொடுத்துள்ளார் என்று சொல்லலாம்.
இன்று வைபவ் சூரியவன்ஷி இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வெறும் 11 பந்துகளில் மின்னல் வேகத்தில் அரைசதம் அடித்து வரலாறு படைத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது உலக சாதனையாக அமைந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் உள்ளிட்டோர் 12 பந்துகளில் அரைசதம் அடித்திருக்கின்றனர். அதனையும் வைபவ் சூர்யவன்ஷி இன்று முறியடித்தார். எனினும் இது லிஸ்ட் ஏ தொடர் என்பதால் இந்த சாதனை கணக்கில் எடுத்துக் கொள்ள வாய்ப்பு குறைவு.
அதிவேக அரைசதத்தை பதிவு செய்த பின்பும் அவரின் அதிரடி தொடர்ந்தது. 29 பந்துகளில் 94 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் மூலம் ஆட்டமிழந்து சத்தம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

வைபவ் அதிரடி ஆட்டம் காரணமாக 50 ஓவர்களில் 09 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்களை எடுத்தது. அணி சார்பில், ப்ரியான்ஸ் ஆர்யா 39, ருதுராஜ் 40, திலக் வர்மா 67, குமார் 36, சூர்யான்ஸ் செடிக்கே 02, நிஷாந்த் சிந்து 16, விப்ராஜ் நிகம் 27, அனுகூல் ராய் 27, யாஷ் தாகூர் 02 என ரன்களை எடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் குகதாஸ் மதுளன், ரவிந்தது, வனுஜ தலா 02 விக்கெட்டினையும், மொஹமட் சிராஜ், சஹன், டுலாஜ் தலா 1 விக்கெட்டினை கைப்பற்றினர்.

இதனையடுத்து 378 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை A அணி, 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்களை மாத்திரம் எடுத்து தோல்வியடைந்தது. அணி சார்பில் அதிகபட்சமாக Wanuja Sahan 62, Sadeera Samarawickrama 52 என ரன்கள் அடித்தனர்.
இந்திய அணி சார்பில் யஷ் தாகூர்,விப்ராஜ் நிகம் தலா 03 விக்கெட்டினையும், அங்குல் ராய் 02 விக்கெட்டினையும், திலக் வர்மா, அசோக் சர்மா தலா 01 விக்கெட்டினை வீழ்த்தினர். இதில் இந்திய A அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்த முத்தரப்பு தொடரை கைப்பற்றியுள்ளது.
English Summary
India A defeats Sri Lanka A by 66 runs