"எனக்குச் சவக்குழி தோண்டப் பார்க்கிறார்கள்": மாநிலங்களவையில் பிரதமர் மோடி ஆவேசம்!
PM Modi in Rajya Sabha Opposition Seeks to Dig My Grave
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று (பிப். 5) பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய பதிலுரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்தது மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தை ஒழித்ததால், எதிர்க்கட்சியினர் எனக்குச் சவக்குழி தோண்டப் பார்க்கின்றனர்.
நீங்கள் எவ்வளவு கோஷங்கள் எழுப்பினாலும், எனக்குச் சவக்குழி தோண்ட உங்களால் முடியாது என அவர் சவால் விடுத்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்காக ₹4 லட்சம் கோடி மதிப்பில் நலத்திட்டங்களை எமது அரசு செயல்படுத்தி வருகிறது.
1961-ல் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு, பல ஆண்டுகளாகக் காங்கிரஸால் கிடப்பில் போடப்பட்ட சர்தார் சரோவர் அணைத் திட்டமே அவர்களின் தீய எண்ணத்திற்குச் சான்று.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தன் தந்தை நேரு உருவாக்கிய திட்டக்குழுவைக் கலைத்தாரே தவிர, கட்சியின் செயல்பாடுகளை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாங்கள் 2014-ல் நீதி ஆயோக் அமைப்பை உருவாக்கி, நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தியுள்ளோம்" என்றார்.
English Summary
PM Modi in Rajya Sabha Opposition Seeks to Dig My Grave