மோடி அமைச்சரவையில் மாற்றம்! 12 புதிய மத்திய அமைச்சர்கள்! அண்ணாமலைக்கு வாய்ப்பு?!
PM Modi Cabinet may be change
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பை திட்டமிட்டு வருகிறார். பா.ஜ.க. தேசிய தலைவர் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வுக்குப் பின், அமைச்சரவில் முக்கிய மாற்றங்கள் நிகழும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மே இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் பெரும்பான்மையிலான மாற்றங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. இதில் தமிழ்நாடு, பீகார் மாநிலங்களை உள்வாங்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி தற்போது ஒவ்வொரு அமைச்சகத்தையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து, அமைச்சர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து வருகிறார்.
இதற்காக துறை வாரியான செயல்பாடுகள், சாதனைகள் பற்றிய முழு தகவல்கள் மையப்படுத்தப்பட்டு வருகின்றன. இது தற்போதைய மத்திய அமைச்சர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பலர் சமூக ஊடகங்களில் தங்கள் சாதனைகளை பகிர்ந்து வருகின்றனர். சில மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட 7–8 பேர் பதவியில் இருந்து விலக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. அவர்களுக்கு பதிலாக 10–12 புதுமுகங்கள் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றத்தையொட்டி சில மத்திய அமைச்சர்கள் கோவில்கள், குலதெய்வ வழிபாடு, ஜோதிட ஆலோசனைகளில் ஈடுபட தொடங்கி விட்டனர். ஆனால், இதை பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
மற்றம் செய்யப்படும் இந்த புதிய அமைச்சரவையில் அண்ணாமலைக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
English Summary
PM Modi Cabinet may be change