கலர் கலர் நாடகம் போடுறாங்க! உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மக்களுக்கு போட்டு காட்டும் நாடகம் தான்! - எடப்பாடி பழனிச்சாமி - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் 'எடப்பாடி பழனிசாமி' அவர்கள், இன்று சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு நிருபர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது," அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி மிக வலுவாகவே உள்ளது.

தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறதா என உதயநிதி பார்த்து கொள்ளட்டும். தனது சுற்றுப்பயணம் மிகுந்த எழுச்சியுடன் நடந்து வருகிறது. போகும் இடமெல்லாம் தி.மு.க. ஆட்சி இருக்கக் கூடாது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்தாண்டு தேர்தல் வருவதால் தி.மு.க. நடத்தும் நாடகம் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்கிற பெயரில் நாடம் நடத்தப்படுகிறது.

4 ஆண்டுகளாக ஒன்றுமே செய்யாமல் இப்போது குறைகளை கேட்கிறார்கள். அ.தி.மு.க.வுடன் மேலும் சில கட்சிகள் கூட்டணி வைக்க உள்ளன" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

playing a color color drama Stalins plan with you just drama show people Edappadi Palaniswami


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->