பாஜக குறி வைத்த 5 மாவட்டங்கள்! தனி கவனத்துடன் களமிறங்க திட்டம்! - Seithipunal
Seithipunal


எட்டு தொகுதிகளுக்கு படையெடுக்க போகும் பாஜக தலைவர்கள்!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா தனது கள வியூகங்களை அமைத்து வருகிறது.

நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்பு பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இதனால் இரண்டு தேர்தலுக்கும் சேர்த்து தனது கள வியூகங்களை பாஜக அமைத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இருந்து குறைந்தது ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக தமிழகத்தில் களமிறங்கியுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, சிவகங்கை, கரூர், ஈரோடு, நீலகிரி மற்றும் கோவை ஆகிய எட்டு மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளை பாஜக குறி வைத்துள்ளது.

இந்த தொகுதிகளுக்கு தனி கவனம் செலுத்தி தேர்தல் வியூகங்கள் அமைத்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் மூத்த தலைவர்களும் மற்றும் நிர்வாகிகளும் இந்த குறிப்பிட்ட எட்டு தொகுதிகளுக்கு அதிகம் கவனம் செலுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். வட இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அதே தேர்தல் வியூகத்தை இந்த எட்டு தொகுதிகளில் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. 

இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில் தமிழகத்தில் இருந்து எட்டு தொகுதிகள் லட்சியம் ஐந்து தொகுதிகள் நிச்சயம் என்கிறார்கள். தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வருட காலங்கள் இருக்கும் நிலையில் தற்போதே பாஜக தனது தேர்தல் பணியை தமிழகத்தில் தொடங்கிவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Plan to launch with special focus on five Mps


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->