NDA தேர்தல் பிரசார பொதுக்கூட்ட ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்ட பியூஷ் கோயல்; 'தி.மு.க. அரசு இந்துக்களுக்கு விரோதமானது'என பேட்டி..! - Seithipunal
Seithipunal


நாளை மறுநாள், 23-ந்தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இதனை சென்னை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டேன். இந்த பொதுக்கூட்டத்த்தில் ஒரே மேடையில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்கினர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம், ஊழல் தி.மு.க. அரசின் முடிவுக்கான தொடக்கமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் தயாராகி விட்டனர் என்று கூறிய அவர், தி.மு.க. அரசு இந்துக்களுக்கு விரோதமானது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் குறித்த பேச்சு தொடர்பாக கருத்து பதிவிட்ட பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தலைவர் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என்று பியூஷ் கோயல் மேலும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Piyush Goyal stated in an interview that the DMK government is hostile to Hindus


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->