தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்..!
Petition filed in the Supreme Court seeking a directive to the Governor to invite TVK leader Vijay to form the government
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்து 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனாலும், தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 எனும் அருதி பெரும்பான்மை தேவை என்ற நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.
தவெக ஆட்சியமைப்பதற்கு அருதி பெரும்பான்மைக்காக திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், இரண்டு இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு கேட்டு தவெக கோரிக்கை வைத்தது. இதில் காங்கிரஸ் முதல் கட்சியாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி அமைச்சரவையில் இடம் வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் தவெக கூட்டணியில் இணைந்துள்ளது.
அத்துடன், இடதுசாரி கட்சிகளும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பது என்று ஆதரவு கரம் நீட்டியுள்ளது. அத்துடன், மாநில நலன் உள்ளிட்ட விவரங்களுக்கு பிரச்சினை வந்தால் திமுகவுடன் பயணிப்பதும் என தீர்மானித்து அறிவித்துள்ளன. இந்திய முஸ்லிம் கட்சி தனது ஆதரவு நிலைப்பாட்டை பின்வாங்கியுள்ளது. அதேநேரம் விடுதலை சிறுத்தைகள் இன்னும் தனது ஆதரவை தெரிவிக்கவில்லை. இதனால் விஜய் முதல்வர் ஆவது கேள்வி குறியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய்க்கு சட்டமன்றத்தில் 116 எம்.எல்.ஏ ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் மாளிகைச் சென்றார். இதற்கிடையில், ஐ.யூ.எம்.எல். தனது ஆதரவை தருவதாக அறிவித்ததாக தகவல் வெளியானது. அத்துடன், விசிகவும் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு தனது ஆதரவையும் தருவதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்னும் உத்தியோக பூர்வ ஆதரவு கிடைக்கவில்லை.
ஆனால், ஐ.யூ.எம்.எல். தவெகவுக்கு ஆதரவு தரவில்லை என பிறகு அறிக்கையை வெளியிட்டது. அதேசமயம், விசிக ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர், அமைச்சரவையில் இடம் உள்ளிட்டவை குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. விசிகவும் இன்னும் அதிகாரபூர்வமாக தனது ஆதரவை தவெகவுக்கு அறிவிக்கவில்லை.
இந்தநிலையில், தவெக தலைவர் விஜய் மூன்றாவது முறையாக இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தாலும், அவர் இரவு 09.30 மணி வரையுமே ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை.
இவ்வாறு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு உத்தரவிட கோரி அக்கட்சியின் சார்பில் எழிலரி எனும் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
English Summary
Petition filed in the Supreme Court seeking a directive to the Governor to invite TVK leader Vijay to form the government