எனது விடுதலைக்கு முழுக்க முழுக்க வைகோ தான் காரணம்.. பேரறிவாளன் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, 31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மையாரும், நேற்று (19.05.2022) காலை 11.30 மணி அளவில், சென்னை அண்ணா நகரில் உள்ள, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இல்லம் சென்றனர் . அப்போது வைகோவிற்கு  நன்றி கூறினர்.

சிறையில் இருந்த நாள்களை நினைவூட்டிய பேரறிவாளன், செய்தியாளர்களிடம் கூறியது: இதையடுத்து, பேரறிவாளன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த விடுதலைக்கு முழுக்க முழுக்க அண்ணன் வைகோ காரணமாக இருந்தார்கள். அதற்கு நன்றி கூறுவதற்காகத்தான் வந்தோம். நேற்றைக்கே இங்கே வர நினைத்தோம். ஆனால், நேரம் ஆகி விட்டது.

இந்தியாவின் தலைசிறந்த வழக்கு உரைஞர் ராம் ஜெத்மலானி அவர்களை அழைத்து வந்து வாதாடச் செய்தார்கள். அவர், சிறைக்குச் சென்று கைதிகளைப் பார்க்கின்ற வழக்கம் இல்லை. ஆனால், வேலூர் சிறைக்கு வந்து எங்களைப் பார்த்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடி, தூக்குத்தண்டனைக்குத் தடை ஆணை பெற்றுக் கொடுத்தார். 

உச்சநீதிமன்றத்தின் அத்தனை அமர்வுகளிலும் பங்கேற்று வாதாடினார். அவருடைய வாதங்கள்தான், எங்கள் விடுதலைக்கு வழிகாட்டியது; முதன்மைக் காரணம் ஆயிற்று.ஜெத்மலானி அவர்கள் தற்போது உயிரோடு இல்லை. ஆனால், அவர் செய்த உதவியை நாங்கள் என்றைக்கும் மறக்க முடியாது என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

perarivalan thanks to vaiko


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->