பரபரப்பு.. பிரபல தமிழ் நடிகை மீது கல் வீச்சு..! 
                                    
                                    
                                   peoples attack to actor and bjp ex mp navneet kavur rana in election campaighn
 
                                 
                               
                                
                                      
                                            மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவு செய்யப்படும் வாக்குகள் 23ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டம் ஹலார் கிராமத்தில் நேற்று இரவு 9 மணியளவில் பாஜக தேர்தல் பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் பாஜக கூட்டணியின் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள நடிகையும், பாஜக முன்னாள் எம்.பியுமான நவ்நீத் கவுர் ராணா (அம்பா சமுத்திரம் அம்பானி திரைப்பட நடிகை) சென்றிருந்தார். அங்கு திரண்டிருந்த பொதுமக்களில் சிலர் முன்னாள் எம்.பி. நவ்நீத் கவுர் ராணா மற்றும் பாஜகவினர் மீது கற்கள், நாற்காலியை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக நடிகை ராணா போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். நவ்நீத் ராணா தமிழில் கருணாஸ் நடித்த அம்பா சமுத்திரம் அம்பானி படத்தின் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
                                     
                                 
                   
                       English Summary
                       peoples attack to actor and bjp ex mp navneet kavur rana in election campaighn