மகனின் வெற்றிக்காக முருகனிடம் தவம்...! - திருத்தணியில் தியானத்தில் ஆழ்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர்...!
Penance to Lord Murugan success his son SA Chandrasekhar deep meditation Tiruttani
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், முதல் முறையாக சட்டமன்றத் தேர்தல் களத்தில் கால் பதித்துள்ளது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், திருத்தணியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் இன்று காலை பக்தி நிறைந்த நிகழ்வு நடைபெற்றது.

நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர், காலை 7 மணியளவில் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
ரூ.100 கட்டண சேவையின் மூலம் சுப்பிரமணிய சுவாமியை பக்தியுடன் வேண்டிக் கொண்ட அவர், பின்னர் உற்சவர் முருகப்பெருமானையும் பணிவுடன் தொழுதார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அனைத்து தொகுதிகளிலும் சிறப்பான வெற்றி பெற வேண்டும் என்ற மனமார்ந்த வேண்டுதலுடன் அவர் இந்த தரிசனத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவில் வளாகத்தில் சுமார் 10 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Penance to Lord Murugan success his son SA Chandrasekhar deep meditation Tiruttani