பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது - நடிகர் சித்தார்த், முன்னாள் நீதிபதி கடிதம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றமுன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன், முன்னாள் விமானி கேப்டன் மோகன் ரங்கநாதன், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில், "சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பரந்தூர் பகுதியில் கட்டுமானங்கள் ஏற்படுத்த இருக்கும் நிலம், அடையாற்றின் தென்மேற்கு நீர் பிடிப்புபகுதியின் 500 சதுர கிமீ பரப்புக்குள் அமைந்துள்ளது.

மழைக்காலங்களில் இந்த பகுதியிலிருந்து வரும் நீர், செம்பரம்பாக்கத்தில் இருந்து வெளியேறும் நீருடன் அடையாற்றில் சேருகிறது. 

இதன் காரணமாகத்தான் கடந்த 2015-ம் ஆண்டு மணிமலங்கலம், பெருங்களத்தூர், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் போன்ற பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இது குறித்து இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Instituteof Science), பல்துறை இடையிலானநீர் ஆராய்ச்சி மையம் (Inter disciplinary Center for Water Research) ஆகியவை நடத்திய ஆய்வில், கடந்த 2015 மழை வெள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமல்லாது, மற்ற காரணங்களும் முக்கிய பங்காற்றின எனத் குறிப்பிட்டுள்ளது.

அன்றைய மழை வெள்ளம் அடையாறு வழியாக மாநகருக்குள் நுழையும்போது 3 ஆயிரத்து 800 கன மீட்டராக (1 லட்சத்து 34 ஆயிரம் கன அடி) இருந்தது.

அடையாற்றின் கொள்ளளவு விநாடிக்கு 2 ஆயிரத்து 28 கன மீட்டர் மட்டுமே என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடம் உள்ளடக்கிய பகுதியிலிருந்து 3 ஆயிரம் கன மீட்டர் நீர் அடையாற்றுக்கு வந்துள்ளது.

அடையாற்றின் கொள் திறனை அதிகரிக்க முடியாது. நீரியல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஆற்றின் கரையில் 18 சதுர கிமீ பரப்பில், நீர் மண்ணுக்குள் ஊடுருவ முடியாத தளத்தை ஏற்படுத்துவது பேரிடரை கூவி அழைப்பதாகும். பரந்தூர் விமான நிலையத்துக்குத் திட்டமிடுபவர்கள், அதனால் சென்னைக்கு என்ன பாதிப்பு என்பதை யோசிக்க வேண்டும்.

எனவே, பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று, தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்." என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parandur New Airport Chennai issue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->