விடுதலைப் போராட்ட வீரர், தமிழக முன்னாள் அமைச்சர் பி.கக்கன் பிறந்த தினம்.!!
p kakkan birthday 2022
பி.கக்கன் :
விடுதலைப் போராட்ட வீரர், தமிழக முன்னாள் அமைச்சர் பி.கக்கன் 1908ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவர் அரசியல் அமைப்பு சட்டசபை உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், பொதுப்பணித்துறை, பழங்குடியினர் நலத்துறை, விவசாயத்துறை அமைச்சர், மாநில உள்துறை அமைச்சர் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

இவர் அமைச்சர் பொறுப்பு வகித்த காலக்கட்டத்தில் அணைகள், இரண்டு விவசாயப் பல்கலைக்கழகங்கள் கட்டப்பட்டன. இவரின் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999ஆம் ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.
எளிமையின் சின்னமாகவும், பொது வாழ்வில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்த பி.கக்கன் 1981ஆம் ஆண்டு மறைந்தார்.