செங்கோட்டையனை சந்தித்த ஓபிஎஸ் டீம்! அடுத்த அதிரடிக்கு தயாராகும் அதிமுக? அதிர்ச்சியில் எடப்பாடி! - Seithipunal
Seithipunal


எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு அமித்ஷாவை சந்தித்து, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு அதிமுக கூட்டணியில் இடமில்லை என்று உறுதி செய்து விட்டார். இதனால் பழனிசாமி பக்கம் தனது நிலைப்பாட்டை கடுமையாக வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால், இதற்கிடையே புதிய அரசியல் அலை கிளம்புகிறது. ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் செங்கோட்டையனை நேரில் சந்தித்துள்ளனர். மேலும் விரைவில் ஓபிஎஸ் – செங்கோட்டையன் சந்திப்பு நடக்கப்போகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அடுத்து இந்த ஆலோசனையில் டிடிவி தினகரனும் இணைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

செங்கோட்டையன் ஏற்கனவே அதிமுகவில் அதிருப்தி மனநிலையுடன் செயல்பட்டு வந்த நிலையில், விலகிச் சென்ற தலைவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார். இதே நேரத்தில் எடப்பாடி, சசிகலா – தினகரன் – ஓபிஎஸ் ஆகியோரின் மறுபிரவேசத்தை முற்றிலும் தடைசெய்து, அமித்ஷாவுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தியிருப்பது அதிமுக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் தனித்த அரசியல் பாதையை அமைப்பார்களா? அல்லது அதிமுகவில் அதிருப்தியாளர்களை சேர்த்து புதிய அதிரடியை உருவாக்குவார்களா? என்பதை அரசியல் வட்டாரங்கள் தீவிரமாக கவனித்து வருகின்றன.

மொத்தத்தில், அடுத்த சில வாரங்களில் அதிமுக அரசியலில் இன்னும் பெரிய அதிரடி காத்திருக்கிறது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS team meets Sengottaiyan Is AIADMK preparing for the next action Edappadi in shock


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->