பாஜகவுக்கு தாவிய ஓ.பி.எஸ் ஆதரவாளர்..!! அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் இணைந்தார்..!! - Seithipunal
Seithipunal


நிலக்கோட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தமிழக பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதிமுக உட்கட்சி பிரச்சனை காரணமாக இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா என நான்கு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக நிர்வாகிகள் பலர் மாற்றுக்கட்சிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவையில் நடைபெற்ற விழாவில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அதே போன்று முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் சில தினங்களுக்கு முன்பு தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். 

இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது அதிமுகவை சேர்ந்த நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் இன்று பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதுக்குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் "பாரதப் பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று பாஜக மூத்த தலைவர்களின் முன்னிலையில் அன்பழகன் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS supporter Nilakottai Anbazagan joined BJP in presence of Annamalai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->