ஓபிஎஸ்சை தொடர்ந்து அவரது மகன் பதவிக்கும் ஆப்பு.. அடுத்த கட்ட அதிரடியில் இறங்கிய இபிஎஸ்.!!
OPS Son MP Posting Issue
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து, கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில், இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பொதுக்குழு கூட்டத்தில் கட்சிக்கு விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், பொருளாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம், அவரது இரு மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.
தன்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை எனவும், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை தான் கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பை வெளியிட்டார். அதேபோல எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை நீக்குவதாக அடுத்தடுத்து பட்டியல்களை வெளியிட்டனர்.

இதையடுத்து, கட்சியின் பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த 17ஆம் தேதி நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் வகித்து வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறித்து, அப்பதவியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது பரிசீலனையில் இருப்பதாக அப்பாவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிலிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கட்சியிலிருந்து ரவீந்திரநாத் நீக்கப்பட்டிருப்பதால், மக்களவையில் அவருக்கு அதிமுக எம்பி என்ற அந்தஸ்தை கொடுக்க வேண்டாம் எனவும், அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.