கூட்டணி, மெகா கூட்டணி | பச்சை கொடி காட்டிய ஓபிஎஸ் - விரைவில் நடக்க இருக்கும் சந்திப்பு! - Seithipunal
Seithipunal


கூட்டணி அமைத்து தான் திமுகவை வீழ்த்த முடியும். கூட்டணிக்கு நான் தயாராக உள்ளேன் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலர் டிடிவி தினகரன் விடுத்த அழைப்பிற்கு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பச்சை கொடி காட்டியுள்ளார்.

தஞ்சையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தெரிவித்ததாவது, "தவறான போக்கில் ஆட்சி செய்யும் திமுகவிற்கு, மூக்கணாங்கயிறு போல் ஆளுநர் தேவைதான். திமுக என்ற இந்த தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என்றால், கூட்டணி அமைத்தால் தான் முடியும். 

திமுகவிற்கு எதிராக கூட்டணி, இல்லை சொல்கிறார்களே மெகா கூட்டணி (எடப்பாடி பழனிசாமி அறிவித்த மெகா கூட்டணி) அமைத்தாலும் நாங்கள்  நேசகரம் நீட்டுவோம், கூட்டணி தலைமை குறித்து அந்த நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம்" என்று டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "அதிமுக இடத்தை பாஜக பிடிக்க பார்க்கிறது என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுக ஒற்றுமையை பாஜக குலைக்கவில்லை. எங்களை யாராலும் மிரட்ட முடியாது.

அதிமுகவின் தலைமையில் பிரச்னை உள்ளது போல் மாயத் தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. திமுக, அதிமுக அண்ணன் தம்பிகள் தான். ஆனால் நாங்கள் பயணிக்கும் பாதை வேறு.

டிடிவி தினகரன் உடன் கூட்டணிக்கு தயார். அவரை சந்திக்க வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக சந்திப்பேன்” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS Say About AMMK Alliance


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->