#BigBreaking || சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை இழக்கிறார் ஓபிஎஸ்.! சபாநாயகர் இடம் பரிந்துரை கடிதம்.!  - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சித் துணைத் தலைவரை மாற்றுவது தொடர்பாக, சபாநாயகர் அலுவலகத்தில் அதிமுக சார்பாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிமுகவின் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும், ஓபிஎஸ்.,யை அதிமுகவின் பொதுக்குழு நீக்கி இருக்கிறது.

தற்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் நடந்த அதிமுகவின் எம்எல்ஏக்களின் கூட்டத்தின் போது, எதிர்க்கட்சி துணைத் துணைத்தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகிது.

மேலும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வத்தை நீக்குவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், அதிமுகவின் தலைமை கொறடா எஸ்பி வேலுமணி, இன்று சென்னை தலைமை அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவுடம் நேரடியாக சென்று வரும் கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வத்தை நீக்குவது தொடர்பாக பரிந்துரை பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops opposite vice leader admk eps side


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->