அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ஓபிஎஸ்-சின் காளை என்ன ஆச்சு.?!  - Seithipunal
Seithipunal


இன்று காலை 08.10 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டியானது மதுரை அவனியாபுரத்தில் துவங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். வைரஸ் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாடுகளை விதித்து ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. 

ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் வழியாக முதலில் பாலகுரு நாதர் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டு, தொடர்ந்து மூன்று கோவில்கள் வரிசையாக விடப்பட்டது. அதன் பின்னர் காளைகள் போட்டிகள் தற்போது ஒன்றன்பின் ஒன்றாக வந்து உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

Breaking: ஜாதி, அரசியல் ரீதியான போஸ்டர்கள் ஜல்லிக்கட்டில் கூடாது - மதுரை  கிளை உத்தரவு.! - Seithipunal

இதனை கண்ட ஜல்லிக்கட்டு வீரர்கள் உற்சாகம் அடைகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

காளைகளுக்கு இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் விளையாட்டின் போது அடிபடும் மாடுபிடி வீரர்களுக்கு 8 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கிறது. மேலும், வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பங்கேற்க 788 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. 430 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து விளையாடி வருகின்றனர். 

BREAKING சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை.! ஒட்டு மொத்த தமிழகமும்  கொண்டாட்டத்தில்.!! - Seithipunal

இந்த நிலையில், தற்போது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் காளை மாடும் பங்குபெற்றது. அவருடைய காளை ஜல்லிக்கட்டு வீரர்களை மிரள வைத்து. அதிலும், ஒரு வீரர் காளையை பிடிக்க முயற்சித்த போது போராடி வென்று பரிசுகளை தட்டி சென்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops jallikkattu kalai in avaniyauram 


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal