ஓபிஎஸ் பாவம் கலங்கி போய் இருக்கிறார்! இறக்கப்பட்டு பேசிய துரைமுருகன்!
OPS is confused Duraimurugan who was taken down and spoke
வேலூர் | இரட்டை வேடம் போடும் துரைமுருகன்! எதை எதையோ பிதத்துகிறார் பன்னீர்செல்வம்!
ஆந்திராவின் பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட போவதாகவும் ஏற்கனவே அமைந்துள்ள அணையின் உயரம் உயர்த்தப் போவதாகவும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார். இத்திட்டத்திற்காக சுமார் 320 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் "துரைமுருகன் பாலாற்று விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறார். சட்டமன்றத்தில் ஒன்று பேசுகிறார் வெளியில் ஒன்று பேசுகிறார்" என விமர்சனம் செய்திருந்தார்.
இன்று காட்பாடியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் " துரைமுருகன் "சட்டமன்றத்தில் ஒன்று பேசுகிறார் வெளியில் ஒன்று பேசுகிறார் அவர் இரட்டை வேடம் போடுகிறார்" என்று ஓ.பன்னீர்செல்வம் செய்த விமர்சித்ததை கேள்வியாக எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் " நானே பாவம் இரட்டை வேடம் தான் போடுகிறேன், அவர் பல வேடம் போட்டுக் கொண்டு இருக்கிறார். அவரை ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும். பாவம் அவர் கலங்கி போய் எதையெதையோ பிதற்றுகிறார்.
ஆந்திர முதல்வர் அணை கட்டுவதாக சொல்லி இருக்கிறார். தமிழக அரசு சார்பில் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் அதற்கான முயற்சியையோ கட்டுமான பணியையோ மேற்கொண்டால் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என பதிலளித்தார்.
English Summary
OPS is confused Duraimurugan who was taken down and spoke