தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு...எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானால்தான் உண்டு...! - நடிகை கௌதமி - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் வந்த நடிகையும், அ.தி.மு.க. கொள்கை பரப்பு மாநில துணை செயலாளருமான "கவுதமி"  அவர்கள், அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"கடந்த 4½ ஆண்டு காலத்தில் தமிழக மக்கள் சந்திக்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, விலைவாசி உயர்வு, பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளுக்கு வருகிற சட்டமன்றத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனால் தான் தீர்வு கிடைக்கும்.

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றியடைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் அதிசய பிறவிகள். நடிகர் விஜய்யின் எதிர்கால நடவடிக்கையை பொறுத்து தான் அவர் அரசியலில் வெற்றி பெறுவாரா? என்பது தெரியும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப்பயணம் மக்களின் பிரச்சனைகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதால் மக்களை தேடி சென்று மக்கள் பிரச்சனைகளை பேசும் பயணமாக மாறியுள்ளது.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வரும் சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. கண்டிப்பாக பெரும்பான்மை இடங்களை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றும். அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்ற சம்பவங்களை எதிர்க்கட்சியினர் பெரிதாக்கி பேசினார்கள்.

ஆனால் இப்போது தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்களை எதிர்க்கட்சியினர் பேசவே இல்லை. வருகிற சட்டமன்றத்தேர்தலில் அ.தி.மு.க. அடையும் வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி, பேட்டியின்போது குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

only solution problems people Tamil Nadu is if Edappadi Palaniswami becomes Chief Minister Actress Gautami


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->