#சற்றுமுன் | ஒத்த ஓட்டு பாஜக வேட்பாளர் பரபரப்பு பேட்டி.! ட்ரோல் செய்யும் முட்டாள்களுக்கு நெத்தியடி.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குருடம்பாளையம் பகுதியை சார்ந்தவர் கார்த்திக். இவர் பாரதிய ஜனதா கட்சியில் பிரமுகராக இருந்து வருகிறார். இந்நிலையில், குருடம்பாளையம் ஊராட்சி மன்ற 9 வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளராக களமிறங்கி ஒரேயொரு வாக்குகள் மட்டுமே பதிவாகி பெரும் அதிர்ச்சியை தந்தார்.

இவர் குறித்து சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யட்டும் விதமாக பலரும் பதிவிட்டு வந்த நிலையில், வேட்பாளர் கார்த்தி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்திருப்பதாவது,

"என்னுடைய பெயர் கார்த்திக். நான் கோவை பாஜக வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்து வருகிறேன். தற்போது சமூக வலைதளங்களில் ஒன்பதாவது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரு வாக்கு மட்டுமே வாங்கியுள்ளதாக சொல்லி வருகின்றனர்.

அது முற்றிலும் தவறான செய்தி. நான் இருக்கிறது நான்காவது வார்டு. என்னுடைய குடும்பத்திற்கும் 4 வது வார்டில் மட்டுமே வாக்குகள் உள்ளது. 9வது வார்டில் இடைத்தேர்தல் வந்த காரணத்தினால், நாம் வேட்புமனு கொடுத்துப் பார்க்கலாம். கிடைத்தால் போட்டியிடலாம், இல்லையென்றால் விட்டு விடலாம் என்ற நோக்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்து. அதில் என்னுடைய வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால், எனது குடும்ப சூழ்நிலை காரணமாக நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வில்லை. அது போக யாரிடமும் சென்று என்னுடைய வாக்கை நான் கேட்கவில்லை. நான் தேர்தலில் நிற்கிறேன் என்று கூட யாரிடமும் நான் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை.

அதனால் எனக்கு ஒரு வாக்கு கிடைத்துள்ளது. அந்த ஒரு வாக்கும் எனக்கு கிடைத்த வெற்றிதான். நான் அடுத்த முறை கண்டிப்பாக 4 வது வார்டில் நின்று, நல்லபடியாக தேர்தல் பணி மேற்கொண்டு, மிகப்பெரிய வெற்றி அடைவேன். என்னுடைய கட்சிக்கும் நான் பெருமை சேர்ப்பேன்.

இந்த ஒரு வாக்கு கிடைத்ததை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அரசியல்வாதிகளும், செய்தி ஊடகங்களும் தவறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து நான் என்னுடைய கட்சி மேலிடத்துக்கு கோரி, காவல் துறையிடமும், நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரலாம் என்று இருக்கிறேன்." என்று அந்தவீடியோவில் வேட்பாளர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

தேர்வில், காதலில், வாழக்கையில் தோல்வியடைந்தால் தற்கொலை செய்து கொள்ளும் இந்த காலத்தில்., தனக்கு கிடைத்த ஒரு வாக்கே எனக்கு வெற்றிதான் என்று சொல்லும் கார்த்திக்கின் மனதிடம், ட்ரோல் செய்யும் முட்டாள்களுக்கு இது நல்ல ஒரு பாடம் என்று சொன்னால் மிகையாகாது. 

அதுவும் இவ்வளவு தூரம் அவரை அசிங்க படுத்திய பின்னும் இப்படி ஒரு பதிலடியை யாரும் எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன் இப்படி ஒரு நிலை உங்களுக்கு ஏற்பட்டால்., ஐயோ என் மானம் போச்சு., மரியாதையை போச்சு என்று முடங்கி போய் இருக்க மாட்டிறீர்கள்.?

நான் அடுத்தமுறை வெற்றிபெறுவேன் என்று கார்த்திக் சொல்லும் போதே., அவர் வெற்றி பெற்றுவிட்டார்., முட்டாள்களின் முன்னால். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one vote karthik


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->