இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழா.! - Seithipunal
Seithipunal


இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழா நாளை திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சல் தலையை வெளியிட்டு உரையாற்ற உள்ளார்.

இந்த விழா, மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் தேவுசிங் ஜெய்சிங்பாய் சௌஹான், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ஏ.நாராயணசாமி, தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சல் தலையை பெற்றுக் கொண்டு உரையாற்ற உள்ளார்.

மேலும், இந்த விழாவில் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் எஸ்.ராஜேந்திர குமார், மக்களவை மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ondi veeran


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->