கூட்டணி குறித்த அறிவிப்பு; '30 நாட்களில் நல்ல செய்தி வரும்' என்கிறார் ஓ.பன்னீர்செல்வம்..!
O Panneerselvam says good news regarding the alliance will come within 30 days
ஜெயலலிதா தலைமையிலான காலகட்டத்தில் அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவராக கருதப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைய அரசியல் சூழலில் தனது இருப்பை காப்பாற்ற வேண்டிய கட்டாயப் போராட்டத்தில் உள்ளார்.
இந்த சூழலில், எந்த கூட்டணியில் இணைய போகிறேன் என்பதை தை பொங்கலுக்கு அறிவிக்கிறேன் என்று செய்தியாளர்களிடம் தொடர்ந்து கூறி வந்தார். இந்நிலையில், தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கூட்டணி அறிவுப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துள்ள ஓ.பி.எஸ்;
''தை பிறந்தால் வழி பிறக்கும். இன்றுதான் தை பிறந்திருக்கிறது. தை மாதத்தில் 30 நாட்கள் இருக்கின்றன. அந்த 30 நாட்களில் கூட்டணி குறித்து நல்ல செய்தி வந்து சேரும்''என்று கூறியுள்ளார். இதையடுத்து, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு கேள்விக்கு, ''அதை மக்கள் முடிவு செய்வார்கள்'' என பதிலளித்துள்ளார்.
English Summary
O Panneerselvam says good news regarding the alliance will come within 30 days