வீடியோ: கடல் மாநாட்டுக்கு தயாரான சீமான்... கடலுக்கே சென்று ஆய்வு!
NTK Seeman Thanneer manadu
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஆகஸ்ட் 30 அன்று திருத்தணியில் மரங்களின் மாநாட்டையும், செப்டம்பர் 27 அன்று தருமபுரியில் மலைகளின் மாநாட்டையும் நடத்தியிருந்தார். இவை அடுத்தடுத்ததாக நடைபெற்றதால், பொதுமக்களிடையே பெரும் கவனம் ஈர்த்தன.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் கடல் மாநாடு மற்றும் தஞ்சையில் தண்ணீர் மாநாடு நடத்தப்படும் என அவர் அறிவித்திருந்தார். அதற்கான முன்னேற்பாடாக சீமான் சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அமலி நகர் மீனவ கிராமத்திற்கு சென்றார்.
அங்கு மீனவர்களுடன் நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சனைகள், வாழ்வாதார சிக்கல்கள் குறித்து கலந்துரையாடினார். பின்னர், கடல் மாநாடு நடைபெறும் இடத்தை தீர்மானிப்பதற்காக, மீனவர்களுடன் சேர்ந்து கடலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
English Summary
NTK Seeman Thanneer manadu