"ஐயா கருணாநிதிக்கு" கடன் பட்டிருக்கிறேன்! மேடையிலேயே முழங்கிய சீமான்! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் மூத்த தலைவரில் ஒருவனான தடா ந. சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக சீமானின் மனைவி கயல்விழி மேடை ஏறி பேசினார். அவருடைய பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில் வழக்கம் போல சீமானும் தனது பேச்சால் நாம் தமிழர் கட்சியின் தம்பி தங்கைகளின் கை தட்டல்களை அறுவடை செய்தார். 

குறிப்பாக என் அரசியல் வாழ்க்கையிலும் என் மண வாழ்க்கையிலும் எனக்கு உறுதுணையாக இருந்தவர் நமது மூத்தவர் தடா ந.சந்திரசேகரன். என் அப்பா ஸ்தானத்தில் இருந்து என்னை வழிநடத்திய அவர் என் இன்பம், துன்பம், துயரம் எல்லாவற்றிலும் பெருந்துணையாக உறுதுணையாக இருந்துள்ளார்.

நான் கடந்த ஒரு மாத காலமாக மன உளைச்சலில் இருந்த போது தான் நான் அவருடைய அருமையை புரிந்து கொண்டேன். அவர் மட்டும் இருந்திருந்தால் இந்த பிரச்சனை எல்லாம் தூசி போல தட்டி விட்டிருப்பேன் என கண்கலங்கி பேசினார்.

நான் எவ்வாறு மூத்தவருக்கு கடமைப்பட்டிருக்கிறேனோ, அந்த அளவுக்கு ஐயா கருணாநிதிக்கும் கடன்பட்டிருக்கிறேன். என் தலைவன் பிரபாகரனின் தலைக்கு 10 லட்சம் சன்மானம் அறிவித்து ஒட்டிய சுவரொட்டி மூலம் இவன் தான் உங்கள் தலைவன் என தமிழர்களுக்கு சிங்களன் அடையாளம் காட்டியது போல என்னை தொடர்ச்சியாக சிறைபிடித்து இதோ உங்கள் தலைவன் என அடையாளம் காட்டியவர் ஐயா கருணாநிதி என சீமான் பேச நாதக தம்பிகளும் தங்கைகளும் ஆரவாரத்துடன் கைதட்டி குதுகலமானார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK Seeman criticized DMK karunanidhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->