விஜய்யை காப்பாற்றிவிட்டது கேடுகெட்ட திமுக.. ஸ்டாலின் அரசின் அயோக்கியத்தனம் அது - கொந்தளிக்கும் இடும்பாவனம்! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தெலுங்கானாவில் அல்லு அர்ஜுனைக் கைதுசெய்தது போல, கரூர் பேரவலத்திற்குக் காரணமான விஜய்யைக் கைதுசெய்திருக்க வேண்டும். ஆனால், வழக்குக்கூட போடாது முழுமையாகக் காப்பாற்றிவிட்டது கேடுகெட்ட திமுக.

'விஜய்யைக் கைதுசெய்து, அது திமுகவுக்கு  வாக்கரசியலில் எதிர்மறையாகத் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டால் என்ன செய்வது?' எனும் இலாப, நட்டக் கணக்குப் போட்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காது விட்டது திமுக. அவ்வளவு அக்கறை மக்கள் மீது? வெட்கக்கேடு!

41 பேரின் பிணங்களின் மேல் கூட்டணி அமைக்க அதிமுகவும், பாஜகவும் முயற்சித்ததென்றால், தேர்தல் ஆதாயத்தை மனதிற்கொண்டு நடவடிக்கை எடுக்க மறுத்தது சந்தர்ப்பவாத திமுக. 41 பேரின் மரணத்தைவிட அரசியல் இலாபம்தான் முக்கியமெனக் கருதிய ஸ்டாலின் அரசின் அயோக்கியத்தனம் அது!

இன்றைக்கு, "கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டார்கள்" என்கிறார் விஜய். அப்படியென்றால், கரூர் பேரவலத்தில் விஜய்க்கு எந்தப் பொறுப்பும் இல்லையா? எந்தவிதத்திலும் அவர் காரணமில்லையா? எப்படி இப்படியெல்லாம் பேச விஜய்க்கு மனம் வருகிறது? 

இப்போதுவரை கரூர் மரணங்கள் விஜய்க்கு எந்த உறுத்தலையும், குற்ற உணர்ச்சியையும், வலியையும் ஏற்படுத்தவில்லை என்பதற்கு அவரது இந்தப் பேச்சே உதாரணம்.

விஜய் என்றைக்கும் திருந்தப் போவதுமில்லை; வருந்தப் போவதுமில்லை. தன்னிடமிருக்கும் பணத்தையும், திரைக்கவர்ச்சியையும் முதலீடாகக் கொண்டு மக்களை ஆண்டுவிடத் துடிக்கும் விஜய் மிக மோசமானக் காரியக்கிறுக்கன். கடந்தக் கூட்டத்தில் இறந்தவரின் பெயரைச் சொல்லி இரங்கல்கூட தெரிவிக்காத விஜய்யின் தலைக்கனமும், ஆணவமும் மிக மிக ஆபத்தானது" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ntk idumbavanam karthi condemn tvk vijay dmk mk stalin


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->