100 பேரை நான் இறக்கிக் காட்டட்டுமா? செந்தில்வேலுக்கு இந்தத் துணிவைக் கொடுத்தது யார்? கொந்தளிக்கும் இடும்பாவனம் கார்த்தி!
ntk idumbavanam karthi condemn to dmk senthilkumar
நாம் தமிழர் கட்சி இடும்பாவனம் கார்த்தி விடுத்துள்ள கண்டன செய்தியில், "நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் மக்கள் சபை விவாத நிகழ்ச்சியின் படப்பிடிப்பு எழும்பூரிலுள்ள தந்தி நிர்வாகத்துக்குச் சொந்தமான இடத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
விவாதத்தில் செந்தில்வேல் பேசத் தொடங்கும்போது பாஜகவைச் சேர்ந்தவர்கள் கேலி, கிண்டல் செய்தனர். அதில் யாரோ ஒருவர் ஒருமையில் செந்தில்வேலை விளிக்கவே, கோபப்பட்டவர் அந்த அவையிலேயே கெட்ட வார்த்தையில் பேசி, கத்தினார். 100 பேரை நான் இறக்கிக் காட்டட்டுமா? என ஆவேசமானவர், பேச முடியாதென அவையைவிட்டு வெளியேறினார். நெறியாளர், பங்கேற்பாளர்கள் உள்ளிட்ட எல்லோரும் சமாதனம் செய்ய முற்பட்டும், வெளியேறினார்.
செந்தில்வேல் வெளியேறியப் பிறகும், நிகழ்ச்சி தொடர்ந்தது. திமுகவின் தங்க.தமிழ்ச்செல்வன் பேசும்போதும் பாஜகவினர் கேலி, கிண்டல் செய்தனர். அவர் எதிர்வினையாற்றியதும் அடங்கினர். அதன்பிறகு, 1 மணிநேரம் வரை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சி முடிந்தப் பிறகு, வெளியில் செல்ல வேண்டாம் என எல்லோரும் அறிவுறுத்தப்பட்டார்கள். என்னவென்றால், 50க்கும் மேற்பட்டரோடு செந்தில்வேல் வெளியில் நிற்கிறார். வன்முறை ஏற்படும் சூழல் இருக்கிறதெனக் கூறினார்கள்.
செந்தில்வேலைப் பேசவிடாது இடையூறு செய்த பாஜகவினரின் செயல்பாடு அநாகரீகமானது. கண்டிக்கத்தக்கதுதான். அதற்கு திமுகவைச் சேர்ந்த குண்டர்களை அழைத்து வந்து வன்முறைக்கு வித்திடுவது எந்தவிதத்தில் சரியானது?
திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் தங்க.தமிழ்ச்செல்வன் விவாதம் முடிந்ததும், பார்வையாளர்களிடம் இவ்வாறு செய்யக்கூடாது என அறிவுறுத்திவிட்டு, இயல்பானார்.
பத்திரிக்கையாளர் எனும் அடைமொழியோடு விவாதங்களில் பங்கேற்கும் செந்தில்வேல் திமுகவைச் சேர்ந்தவர்களைத் திரட்டி வைத்து வன்முறைக்குத் தூபம் போடுவதெல்லாம் என்ன மாதிரி அரசியல்? செந்தில்வேலுக்கு இந்தத் துணிவைக் கொடுத்தது யார்? கூச்சலிட்டு அநாகரீகமாக நடந்து கொண்டோரை சனநாயகரீதியில் கண்டிக்காது, ஆட்களைத் திரட்டி மிரட்டுவதும், தாக்குவதும்தான் சனநாயகமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
ntk idumbavanam karthi condemn to dmk senthilkumar